Home உலகம் பாலச்சந்திரனை ராணுவம் சுட்டுக்கொல்லவில்லையாம்: மறுக்கிறார் ராஜபக்‌ஷே

பாலச்சந்திரனை ராணுவம் சுட்டுக்கொல்லவில்லையாம்: மறுக்கிறார் ராஜபக்‌ஷே

560
0
SHARE
Ad

Mahinda_Rajapakse12_2கொழும்பு, மார்ச் 02- விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை என அதிபர் ராஜபக்‌ஷே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதில் இந்தியா எடுக்கும் முடிவு குறித்து நான் இந்தியாவிடம் விவாதிக்கவில்லை எனவும் கூறினார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஏராளமான விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் சிலர் ரகசிய இடத்தில் வைத்து கொல்லப்பட்டனர். கடந்த மாதம் பிரபாகரனின் 12வயது இளையமகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவமுகாமில் பிடித்து வைக்கப்பட்டும், பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது ‌போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இவற்றினை சேனல்-4 வெளியிட்டது.இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளதாகவும், ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா.மனித உரிம‌ை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.
பாலச்சந்திரனை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை

#TamilSchoolmychoice

இந்நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷே, அளித்துள்ள பேட்டி, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் எந்த வித போர்க்குற்றங்களும் நடக்கவில்லை. சர்வதேச அமைப்புகளும், ஊடகங்களும் தான் அதனை பெரிதாக்கிவிட்டன. இலங்கை அரசுக்கு எதிராக இங்குள் எதிர்க்கட்சிகள் மற்ற நாடுகளின் ஆதரவினை பெற்று இது போன்று பிரச்சாரம் செய்து வருகி்ன்றன. எகிப்து, துனீசியா, லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று இலங்கையிலும் தூண்டிவிட சதி நடக்கிறது. அதனை ஒரு போதும் இலங்கையில் நடக்க அனுமதிக்கமாட்டேன். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை ,இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை. அப்படி நடந்திருந்தால், அது எனது கவனத்திற்கு வந்திருக்கும். நடந்த சம்பவத்தில் உண்மையிருந்தால் நான் பொறுப்பேற்கிறேன்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தோல்வி: போருக்குபின்னர் 14 ஆயிரம், விடுதலைப் புலிகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு அரசின் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் அவர்கள் புதுவாழ்வு பெற்று வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் இலங்கையில் அமைதி திரும்ப பெரும் முயற்சி மேற்கொண்டேன். நான் அடிப்படையில் புத்தமதத்தினை சேர்ந்தவன்‌, சகிப்புத்தன்மையும்,இரக்க உணர்ச்சியும் எனக்கு உண்டு.
இங்குள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் , தமிழ் தேசிய கூட்டணியின்(டி.என்.ஏ.) கீழ் இணைந்தால், தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீ்ர்வு நிச்சயம் கிடைக்கும். இலங்கை அரசியலமைப்பு சட்டம் 13 திருத்தத்தின் படி இறுதி கட்ட போருக்கு முன்னர் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் அது தோல்வியில் தான்முடிந்தது. வடக்கு மாகாணங்களில் வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும்.ஜெனிவாவில் நடந்து வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா தனது கடமையை செய்யும்.
இலங்கை எப்போதுமே இந்தியாவின் நட்பு நாடுதான். எனினும் இது குறித்து இந்தியாவிடம் நான் விவாதிக்கவில்லை. இவ்வாறு ராஜபக்‌ஷே கூறினார்.இதற்கிடையே இலங்கை போர்க்குற்றம் குறித்த ஆவணப்படம் ஜெனிவாவில் திரையிடப்பட்டுள்ளது.

தீர்மானம் ‌கொண்டுவர உள்ள அமெரிக்கா  கூறுகையில், இலங்கையி்ல் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றநாடுகளை கவலையடையச் செய்‌துள்ளது. இதனை ஐ.நா.வும் கவனத்தில் ‌கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.