கோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது ஆண்டான அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இவ்விழாவின் அறிமுக நிகழ்ச்சியை ஐஆர்டிடிகே லேண்ட் குரூப் ( IRDK Land Group) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், மாண்புமிகு டான்ஸ்ரீ டாக்டர் எம்.பி.ராமசாமி அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார்.
வரும் செப்டம்பர் 30 தொடங்கி, அக்டோபர் 2 வரை, 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளானில் (GM Klang Wholesale City) வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
ஜவுளி, ஆபரணங்கள், தொலைத் தொடர்பு, இயற்கை வளம், சுற்றுலா, காப்புறுதி, தொழில்நுட்பம் என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த முகப்புகள் இந்த விழாவில் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவின் வியாபார முகப்பிடங்களின் கட்டண விவரங்கள் பின்வருமாறு:
Plan A – Standard Booth (3m x 3m) | RM 5 000.00 |
Plan B – Premium Booth (6m x 6m)
(பல கூடுதல் வசதிகள் உட்பட) |
RM 24 000.00 |
மேலும் ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் மற்றும் தமிழக முன்னணி நட்சத்திரங்களின் வருகை என 3 நாட்களுக்கு இந்நிகழ்வு பிரம்மாண்டமாக களைகட்டப் போகிறது.
முதல் நாள் அனைத்துலக கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் தொடக்க விழா, இரண்டாம் நாள் வானவில் நட்சத்திரங்களின் கலைவிழா, மூன்றாம் நாள் டிஎச்ஆர் ராகா மற்றும் மண்ணின் மைந்தர்களின் கலை நிகழ்ச்சிகள் என மாபெரும் கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாராகுங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் www.astrocircle.com.my அகப்பக்கத்திற்குச் சென்று இதற்கான மேல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ஆர்வமுள்ள வணிகர்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்தித் தர மிக ஆவலாய் உள்ளது அஸ்ட்ரோ. மேலும், அனைத்துலக ரீதியில் வணிகர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பங்கேற்பதன்வழி உள்ளூர் வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது.
அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் பெருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ:
- 3 லட்சம் வருகையாளர்களை எதிர்பார்க்கலாம்
- இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் வருகையாளர்களை /பொதுமக்களை கவரும் இடைவிடாத விளம்பரங்கள் ஒளிபரப்பு
- அஸ்ட்ரோ ஊடகத் தளங்களில் உங்கள் விற்பனைகளை மேம்படுத்தல்
- இவ்வாண்டின் மாபெரும் பொழுதுபோக்கு மற்றும் வணிக ஒன்றுகூடல் நிகழ்வு
- அனைத்துலக வணிகர்களுடன் வியாபார வாய்ப்பு
- தமிழக முன்னனி நட்சத்திரங்களின் வருகை
- நாள்தோறும் 12 மணி நேர இடைவிடாத பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள்
- மூன்று நாட்களுக்கு டிஎச்ஆர் ராகாவின் நேரடி ஒலிபரப்பு (நாள்தோறும்4 மணி நேரம்)
- டிஎச்ஆர் ராகாவின் சிறப்பு தீபாவளி கலைநிகழ்ச்சி ஒளிப்பதிவு
- வருகையாளர்களுக்காக சிறப்பு பொது போக்குவரத்து சேவை.
இப்படியாக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே, ஆர்வமுள்ளவர்கள் www.astrocircle.com.my என்ற அகப்பக்கத்திற்கு சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது indiantradeexpo@astro.com.my என்ற மின்னஞ்சல் வாயிலாக ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.