கோலாலம்பூர் – மலேசிய தினத்தை முன்னிட்டு, தேசிய காற்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் பொற்காலத்தை நினைவுக்கூறும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி, ‘ஹரிமாவ் மலாயா 1980’ எனும் ஆவணப்படுத்தை அஸ்ட்ரோ ஒளிபரப்பவுள்ளது.
இந்த ஹரிமாவ் மலாயா 1980 ஆவணப்படம் அஸ்ட்ரோ அரேனா (Arena)-வில் (CH 801/ HD CH 802), அஸ்ட்ரோ (Super Sports HD (CH 810/ HD CH 831) மற்றும் அஸ்ட்ரோ (On the Go) ஆகிய அலைவரிசைகளில் செப்டம்பர் 16-ஆம் தேதி, இரவு 9 மணிக்கு ஒளியேறும்.
இதற்கான அறிமுக நிகழ்வில், தகவல் தொடர்பு, மற்றும் பல்லூடக அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சாலே சாயிட் கெருவாக், அஸ்ட்ரோ குழும தலைமை அதிகாரியான டத்தோ ரொஹானா ரோஸ்ஸான், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
“ஹரிமாவ் மலாயா 1980” எனும் ஆவணப்படம், 1980-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றிப்பெற்ற ஹரிமாவ் மலாயா அணியின் சொல்லப்படாத சரித்திரத்தை உள்ளடக்கிய ஆவணப்படமாகும். 36 ஆண்டுகள் கழித்து, இந்த அணியில் இடம்பெற்றிருந்த தேசிய காற்பந்து ஜாம்பவங்களான டத்தோ சோ சின் ஆவுன், ஹசாஸ் சானி, ஜேம்ஸ் வொங், டத்தோ சந்தோக் சிங், அவர்களுடைய பயிற்றுனர் கார்ல் ஹெய்ன்ஸ் வெய்காங், மூத்த கால்பந்து வர்ணனையாளர் துவான் ஹாஜி சுல்கார்னாயின் ஹசான், காலஞ்சென்ற போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் வெளியுறவு அமைச்சர் தெங்கு டான் ஸ்ரீ அஹ்மாட் ரித்தெளடின் தெங்கு இஸ்மாயில். ஆகியோரின் சிறப்பு நேர்க்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணப்படத்தில், போட்டியாளர்கள் கடந்து வந்த நினைவுகள், சவால்கள், நகைச்சுவை, சோதனைகள் மற்றும் போராட்டங்களைக் காணலாம்.
இதனிடையே, “பல்வேறு சவால்களைக் கடந்து மலேசியர்களின் மனங்களில் இடம் பெற்று, வெற்றி பெற்ற மலேசிய ஹீரோக்களைப் பற்றி தான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். 1980-ஆம் ஆண்டு ஹரிமாவ் மலாயா குழுவினர் கடந்து வந்த பாதையானது, குழு ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத் தன்மை ஆகியவையே வெற்றிக்கு வித்திட்டதை நினைவுக்கூறும் வகையில் அமைந்துள்ளது” என அஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை அதிகாரி டத்தோ ரொஹானா ரோஸான் தெரிவித்தார்.
ஹரிமாவ் மலாயா 1980-ஆம் ஆண்டு ஆவணப்படத்தை இயக்கியது, 36 ஆண்டுகால புதிரை அலமாரியிலிருந்து தூசுத் தட்டியதைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அணியில் இடம்பெற்ற அனைவரும் தங்களின் ஜெர்சியை அணிந்துகொண்டு ஸ்டேடியம் மெர்டேக்காவிற்கு வருகைப் புரிந்தது, ஒரு உணர்வுப்பூர்வமான தருணமாக அவர்களுக்கு அமைந்ததாக இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் பாசிர் சிஸ்வோ தெரிவித்தார்.
இதனிடையே இந்நிகழ்வில் பேசிய, டத்தோ சோ சின் ஆவுன், “இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த அஸ்ட்ரோவிற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு ஹரிமாவ் மலாயாவின் மாஸ்கோ நோக்கியப் பயணம் மிகவும் நெகிழ்ச்சியானது, இதில் நிறைய தியாகங்கள் அடங்கியுள்ளன” என் அணியின் பயிற்றுனர் கார்ல் ஹெய்ன்ஸ் வெய்காங் தெரிவித்தார்.
“எங்களின் சுய அனுபவங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது, இந்த ஆவணப்படம் எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்துகிறது” என ஜேம்ஸ் வொங் தெரிவித்தார்.
ஹரிமாவ் மலாயா 1980 ஆவணப்படத்தின் ஆதரவாளர்கள் சி.ஐ.எம்.பி மற்றும் மைலோ ஆகும். இந்த ஆவணப்படத்தின் வழி கிடைக்கும் அனைத்து ஆதரவும், விளம்பர நிதியும் மூத்த விளையாட்டாளர்களுக்கே வழங்கப்படும்.
எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி, ஹரிமாவ் மலாயா 1980 ஆவணப்படத்தை அஸ்ட்ரோ அரேனா (Arena) (அலைவரிசை 801/ HD அலைவரிசை 802) மற்றும் அஸ்ட்ரோ Super Sports HD( அலைபவரிசை 831) ஆகியவற்றில் இரவு 9 மணிக்கு ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் கண்டுகளிக்கலாம். இந்த ஆவணப்படத்தை அஸ்ட்ரோ (On the Go)-விலும் இடம்பெற்றிருக்கும்.
இது தவிர அனைத்து, அஸ்ட்ரோ மற்றும் என்ஜெஓஐ (NJOI) சந்தாதாரர்கள், ஹரிமாவ் மலாயா ஒளிபரப்பை மறுநாள் (செப்டம்பர் 17) மலாய் மொழியில் அஸ்ட்ரோ பிரிமாவிலும் (அலைவரிசை 105) மற்றும் மாயா எச்டி (HD) (அலைவரிசை 135) ஆகியவற்றில் இரவு 10 மணிக்கு கண்டுகளிக்கலாம். அதேவேளையில் மாண்டரின் மொழியில், அஸ்ட்ரோ ஏஇசி (AEC)-இல் ( அலைவரிசை 301/ HD அலைவரிசை 306) மாலை 4.30 மணிக்கும், தமிழ்மொழியில் (அலைவரிசை 201) இரவு 9.00 மணிக்கும் கண்டு களிக்கலாம். ஹரிமாவ் மலாயா 1980 ஆவணப்படம் குறித்த மேல் விபரங்களுக்கு, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
ஹரிமாவ் மலாயா 1980
1.அஸ்ட்ரோ Arena, ( அலைவரிசை 801/ HD அலைவரிசை 802), வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 16,2016, இரவு 9 மணிக்கு (மலாய் மொழி)
2.அஸ்ட்ரோ Super Sports HD (அலைவரிசை 831), வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 16, இரவு 9மணிக்கு (ஆங்கில மொழி)
3.அஸ்ட்ரோ பிரிமா (அலைவரிசை 105) மற்றும் மாயா HD (அலைவரிசை 135) சனிக்கிழமை, 17 செப்டம்பர், இரவு 10 மணிக்கு (மலாய் மொழி)
4.அஸ்ட்ரோ AEC (அலைவரிசை 301/ HD அலைவரிசை 306) சனிக்கிழமை, 17 செப்டம்பர், மாலை 30 மணிக்கு (மாண்டரின் மொழி)
5.அஸ்ட்ரோ வானவில் ( அலைவரிசை 201), சனிக்கிழமை, 17 செப்டம்பர், இரவு 9 மணிக்கு (தமிழ்மொழி)
இந்த 90 நிமிட ஆவணப்படத்தை பாசிர் சிஸ்வோ, ஓலா போலா ஆலோசகரான சியு கெங் குவானின் வழிகாட்டலோடு இயக்கியுள்ளார்.