Home கலை உலகம் பிப்ரவரி 2ஆம் தேதி டிடிஎச்சில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்

பிப்ரவரி 2ஆம் தேதி டிடிஎச்சில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்

949
0
SHARE
Ad

சென்னை,ஜன.15  முதலில் டிடிஎச் பிறகு திரையரங்கம் என்று மார் தட்டிய கமல்ஹாசன், தற்போது முதலில் திரையரங்கம் பிறகு டிடிஎச் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆம், ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘விஸ்வரூபம்’ பிப்ரவரி 2ஆம் தேதி டிடிஎச்சில் வெளியாகிறது.

விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச்சில் ரிலீஸ் செய்து பின்னர் தியேட்டரிலும் வெளியிடப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த கமல், அதன்பிறகு தியேட்டர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டையும் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக சொன்னார். இதற்கு தியேட்டர், டிடிஎச் இரண்டு தரப்பிலுமே பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியாகும் என்றும், டிடிஎச் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி டி.டி.எச்.-இல் வெளியிட இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையரங்குகளில் ஜனவரி 25ஆம் தேதி விஸ்வரூபம் படம் வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து ஒருவாரம் கழித்து பிப்ரவரி 2ம் தேதி டி.டி.எச்சில் வெளியாகிறது.” என்று கூறியுள்ளார். மேலும் டி.டி.எச்சில் வெளியாகும் நிறுவனம் எது என்று பின்னர் அறிவிப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

திரையரங்கில் வெளியான ஒரு வாரம் கழித்து டிடிஎச்சில் படம் வெளியிடப்படும் என்ற இந்த முடிவுக்கு டிடிஎச் நிறுவனங்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. சில நிறுவனங்கள் கமலுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும், வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.