Home வாழ் நலம் கனவு காணுங்கள், அதே சமயம் எதார்த்த வாழ்க்கையையும் நினைவில் வையுங்கள் : நடிகர் ஷாருக்கான்

கனவு காணுங்கள், அதே சமயம் எதார்த்த வாழ்க்கையையும் நினைவில் வையுங்கள் : நடிகர் ஷாருக்கான்

880
0
SHARE
Ad

78eb38d6-c339-4289-b81a-94abdd28efc81மும்பை,ஜன.15 கனவு காணுங்கள், அதே சமயம் எதார்த்த வாழ்க்கையையும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஷாருக்கான், “நான் நடிப்பதற்காக மும்பை வந்த காலகட்டத்தில் வெறும் காதல் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திரைப்படங்கள் தயாராகின. சரியான நேரத்தில் சினிமா துறைக்குள் நுழைந்ததாக நான் கருதுகின்றேன். இப்போது சினிமாவின் போக்கு மாறிவிட்டது. இந்த மாற்றத்தோடு என்னையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு கனவு பிறக்கின்றது. கனவு காண்பது நல்லது. ஆனால், கனவு காணும் வேளையிலும் யதார்த்த வாழ்க்கையை நாம் மறந்துவிடக் கூடாது. முதலில் நாம் தேவையான கல்வியறிவை பெற்றவர்களாக வேண்டும். எனது பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியறிவை வழங்க நான் ஆசைப்படுகின்றேன்.

#TamilSchoolmychoice

இப்போது, என்னுடைய தேவை எதுவாக இருப்பினும், அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நல்ல நிலையில் நான் இருக்கின்றேன். ஆனால், சினிமாவுக்குள் நான் நுழைந்த காலத்தில், சொந்தமாக ஒரு வீடு, ஒரு கார் என்பது மட்டுமே எனது கனவாக இருந்தது. தற்போது எனது கனவுகள் எல்லாமே வெற்றிகரமாக நிறைவேறிவிட்டன. ரசிகர்கள் என்னை பார்க்க விரும்பும் வரை நான் நடிப்பேன்.” என்று கூறினார்.