Home நாடு 12-வது உலகத்தமிழ் இணைய மாநாடு குறித்த தகவல் ஊடகங்களுக்கான விளக்கம்

12-வது உலகத்தமிழ் இணைய மாநாடு குறித்த தகவல் ஊடகங்களுக்கான விளக்கம்

743
0
SHARE
Ad

University-of-Malayaகோலாலம்பூர், மார்ச்.20- உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு மலேசிய நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை 4 நாட்கள் கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளது.

“கையடக்க கணினிகளில் தமிழ்க்கணிமை” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் தமிழ் தொழில் நுட்பத்தை பரப்புவதோடு தமிழ் மென் பொருள்களையும் பொது மக்களுக்கு தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டின் கருத்தரங்குக்கு கையடக்க கணினிகளில் தமிழ்க்கணிமை என்ற தலைமை கருத்தையொட்டிய பல்வேறான ஆய்வுக்கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன.

அதில், கைத்தொலைபேசி மற்றும் கையடக்க கணினிகளில் தமிழ் படிப்பதும் எழுதுவதும், தமிழ் இணயத்தின் தற்போதைய நிலை, கணினி வழி கற்றலும் கற்பித்தலும், திறந்தவெளி தமிழ் மென்பொருள், தமிழை உள்ளூர்மயமாக்கல் போன்ற அம்சங்களும் இடம் பெறும்.

இந்த மாநாடு குறித்த தகவல் ஊடகங்களுக்கான செய்தியாளர் விளக்கக் கூட்டம் பின்வருமாறு நடைபெறும்:-

நாள்: 22 மார்ச் 2013, வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10.00

இடம்:

அறை எண் 3, 4வது மாடி, பல்கலைக் கழக வேந்தர் மண்டபம், மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர்.

Meeting Room 3, Level 4, Chancellery, University Malaya, Kuala Lumpur

மேல் விவரங்களுக்கு, குமாரி ரொஹைசன் ரம்லி  03-7967 3424 / 012-924 9438, இணைய முகவரி  rohaizan@um.edu.my  மற்றும் திரு.சி.எம். இளந்தமிழ் 012-341 3910 இணைய முகவரி elantamil@gmail.com  ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.