Home Featured கலையுலகம் சூப்பர்ஸ்டார் என்றும்16: இறுதிச் சுற்றின் நீதிபதிகள் யார்?

சூப்பர்ஸ்டார் என்றும்16: இறுதிச் சுற்றின் நீதிபதிகள் யார்?

874
0
SHARE
Ad

astro-superstar-pcகோலாலம்பூர் – ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ மாபெரும் இறுதிச் சுற்றுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

பல சுவாரசியமான அனுபவங்களோடு, 10 வாரங்களை கடந்து விட்ட இசைப் போரின் இறுதிச் சுற்று வரும் நவம்பர் 19-ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8 மணிக்கு ஷா ஆலாம்-இல் அமைந்துள்ள ராஜா மூடா மூசா அரங்கில் மிகப் பிரண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

“பாடல் திறன் போட்டி” எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த உள்ளூர் பாடல் போட்டி, 16 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தற்போது, “சூப்பர் ஸ்டார் என்றும் 16” ஆக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

krishமூன்று பிரிவுகளாக நடைப்பெறவிருக்கும் இந்த இறுதிச்சுற்றில் நீதிபதிகளாக பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் மற்றும் பின்னணி பாடகி மாதங்கி வலம் வரவிருக்கின்றனர்.

இவர்களோடு, மலேசியாவின் புகழ்பெற்ற கலைஞர் ஒருவரும் இப்போட்டியில் நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.

mathangiஇறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள ஆறு போட்டியாளர்களும் தங்களுடைய பாடும் திறமையை வெளிப்படுத்தி இம்மூன்று நடுவர்களின் பாராட்டுகளைப் பெறுவார்களா? இல்லையா? என்பதை இவ்வாரம் நடைபெறும் மாபெரும் இறுதிச் சுற்றில் காணலாம்.

அதோடு, இப்பிரம்மாண்ட நிகழ்ச்சியில், மலேசியக் கலைஞர்களின் சிறப்புப் படைப்புகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (231), அஸ்ட்ரோ வானவில் (201) மற்றும் அஸ்ட்ரோ ஆன் தி கோ-வில் கண்டு களிக்கலாம்.