Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ சார்பில் நால்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

அஸ்ட்ரோ சார்பில் நால்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

1000
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற அஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ போட்டியில் நால்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அவ்வகையில் இறையருட் கவிஞர் அமரர் செ.சீனி நைனா முகமது, டத்தோ ஸ்ரீ டாக்டர் செல்வமணி நவசித்ரா சௌடாமணி, ஏ.சி.பி குலசிங்கம் மற்றும் டத்தோ எம். ராஜாமணி ஆகிய நால்வருக்கு அவ்விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 5,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையும் வழங்கப்பட்டன.

அமரர் சீனி நைனா முகமது சார்பிலும், ஏசிபி குலசிங்கம் சார்பிலும் அவர்களது குடும்பத்தினர் அவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

 இறையருட் கவிஞர் அமரர் செ.சீனி நைனா முகமது

astro2

1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, இலக்கியத்திற்கு வரமாய் கிடைத்தவர் தான் செ.சீனி நைனா முகமது. இவர் மலேசியாவில் மூத்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் உங்கள் குரல் பத்திரிக்கை ஆசிரியராக வலம் வந்தவர். கவிதை இலக்கியத்தை முறையாக கற்ற இவர், பிறருக்கு அதைக் கற்று தரும் வல்லமைக் கொண்டவர். தொல்காப்பியம் என்று சொல்லும் போது மலேசியாவிற்கு ஒரு தொல்காப்பியர் செ.சீனி நைனா முகமது. மரபு கவிதைக்குத் தளபதியான இவர் நம் நாட்டில் இறையருட் கவிஞர் என்றும் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி, வானொலி, மேடைக் கவியரங்கங்களில் பாடியும் உள்ளார்.

டத்தோ ஸ்ரீ டாக்டர் செல்வமணி நவசித்ரா சௌடாமணி

astro3ஆசிரியர் என்பது ஆண்டவன் தந்த வரம், அப்படி தான் பெற்ற வரத்தை கொண்டு மாணவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர் தான் டத்தோ ஸ்ரீ டாக்டர் செல்வமணி நவசித்ரா சௌடாமணி. அன்னையின் ஆசைப்படி ஆசிரியரானாலும், மாணவர்களுக்கு அன்னையாய் திகழ்ந்தார். இவர் அரும்பாடுப்பட்டு தான் பெற்ற கல்வியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியும் கண்டார். ஒரு மாணவன் அடிப்படையாகப் பெற வேண்டிய முறையான கல்வி, சுகாதரமான உணவும் பெற உறுதுணையாக இருந்தார்.

ஏ.சி.பி குலசிங்கம்

astro1நம் நாட்டில் பார்ப்பவர்களைப் பிரமிக்கவும் குற்றவாளிகளை அச்சத்தில் நடுங்கவும் செய்தவர் முன்னால் காவல்துறை அதிகாரி ஏ.சி.பி குலசிங்கம். 1970-ஆம் ஆண்டுகளில் நம் நாட்டில் அமைதியைக் குலைத்த போட்டாக் சின் (Botak Chin) உட்பட 25 குண்டர் கும்பலின் முக்கிய புள்ளிகளை இவர் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடுகளுக்கு ஆளானாலும், மாசற்ற தனது கடமை உணர்வை நெஞ்சில் சுமந்து வீரமாய் பணியாற்றினார்.

டத்தோ எம். ராஜாமணி

astroகுடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர் மட்டும் அல்ல தடகளத்தில் யாருக்கும் அஞ்சாதவர் டத்தோ எம். ராஜாமணி. மலேசிய விளையாட்டு துறையில் சகாப்தமாக உதயமாகிய டத்தோ ராஜாமணி, இன்று வரை இளைஞர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறார். இவர் நம் நாட்டின் ஓட்டபந்தயக் களத்தில் சரித்திரம் படைத்த பெண்மணி என்றால் மறுப்பதற்கு இல்லை. இன்றும் தென் கிழக்கு ஆசியாவின் பறக்கும் பாவையாக நம் நாட்டில் மிளிர்கிறார் டத்தோ ராஜாமணி. தொடர்ந்து விளையாட்டு துறையில் பல வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கி தனது சேவையை அயராது நாட்டிற்கு வழங்கி கொண்டிருக்கிறார்.