Home Featured வணிகம் மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்!

மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்!

736
0
SHARE
Ad

karisma_finalஷா ஆலம் – மலேசியாவிலுள்ள மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் மோடெனாஸ் (MODENAS) தற்போது மூன்று புதிய இரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரிஷ்மா 125, எலெகன் 250 ஆகிய இரு இரகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

அதோடு, எடாரான் மோடெனாஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனமும், கிம்கோ (Kymco) என்ற புதிய இரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

தாய்வானிலுள்ள கௌசியங் நகரில் அமைந்துள்ள வாங் யங் மோட்டார் நிறுவனத்தின் கீழ் அனைத்துலகத் தரத்தில் கிம்கோ உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த மூன்று இரக மோட்டார்களும் ஷா ஆலமிலுள்ள இஓஎன் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

கரீஷ்மா 125-ன் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 5,278 ரிங்கிட், எலெகன் 250-ன் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 13,599 ரிங்கிட், கிம்கோவின் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 22,790 ரிங்கிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.