Home Featured நாடு “நீங்கள் சிறந்த சீர்திருத்தவாதி” – மோடிக்கு நஜிப் புகழாரம்!

“நீங்கள் சிறந்த சீர்திருத்தவாதி” – மோடிக்கு நஜிப் புகழாரம்!

588
0
SHARE
Ad

narendra-modi

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வணிகத் தலைவர்களின் சந்திப்பு மாநாட்டை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக தொடக்கி வைத்தனர். பிரதமர் இந்த நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்த வேளையில், நரேந்திர மோடி புதுடில்லியிலிருந்து காணொளி வழியாக (video conference) இந்த சந்திப்பு மாநாட்டை கூட்டாகத் தொடக்கி வைத்தார்.

இந்த சந்திப்பு மாநாட்டின் தொடக்க விழாவின்போது காணொளி வழியாக மோடியுடன் உரையாடியபோது “சிறந்த சீர்திருத்தவாதியாக இருப்பதற்கு உங்களை நான் பாராட்டுகின்றேன். நீங்கள் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களை எல்லோரும் சாதாரணமாக மேற்கொண்டு விட முடியாது. அவர்கள் இதுபோன்று முயற்சி கூட செய்திருக்கமாட்டார்கள். நீங்கள் ஒரு சிறந்த சீர்திருத்தவாதி” என்று நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த துணிச்சலுடன் செயல்பட்டால் அதன் பயன்களை நீங்கள் நிச்சயம் அறுவடை செய்வீர்கள்” என்றும் நஜிப் மோடியிடம் குறிப்பிட்டார்.

மோடி, தனது தொடக்க உரையின்போது, 2020-ஆம் ஆண்டுக்குள் நஜிப் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியா வளர்ச்சியடைந்த நாடு என்னும் அந்தஸ்தைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.