கோலாலம்பூர், மார்ச்.21-இன்றைய உயர்ந்து வரும் காலக்கட்டத்தில் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் குறைவாக உள்ளது.
நேரத்தை சேமிக்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் பன்றிக் கறி, மாட்டிறைச்சி, கொத்துக்கறி, இஞ்சிபூண்டு கொண்டு செய்யப்பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும் கெட்டுப் போகாமல் இருக்க இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படும். அதிலும் ஒரு நாளைக்கு 150 கிராம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, மூன்று அல்லது நான்கு தடவை புகைப் பிடிப்பதற்கு சமமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவுகளானது கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக இரசாயனம் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் முக்கியமாக ‘நைட்ரைட்’ என்னும் பொருள் உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் வைக்கிறது. மேலும் அத்தகைய உணவுகளில் ‘கார்சினோஜென்’ எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் இருக்கிறது.
உடலானது ஆரோக்கியமாக இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்பதை விட, சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பல வகையான புற்றுநோய்கள் வருகின்றன. அதில் அதிகமாக வரக்கூடியது கணையப் புற்றுநோய். இந்த நோயானது மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்.
இந்த நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் சிறிதளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டாலே, அந்த நோய் வரும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போதைய ஆய்வில், இந்த உணவு உண்பவர்களுக்கு புகைப் பிடிப்பவர்களை விட அதிக அளவு கணைய புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில உணவுகள் உடலில் கொழுப்புகளை சேர்த்து உடல் பருமனை அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர். அதற்காக எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ணக்கூடாது, அனைத்து உணவுகளும் புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லவில்லை. ஒரு சிலவற்றை உண்ணலாம், ஆனால் குறைந்த அளவே உண்ண வேண்டும்.
ஆகவே ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சுத்தமான காய்கறி மற்றும் பழங்களை உண்ணலாம். மேலும் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள உணவுகளை, பதப்படுத்தாத உணவுகளை வாங்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்றால் தினமும் 50 கிராம் அளவு மட்டும் போதுமானது. ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, சுத்தமான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.