சென்னை – இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் அனைவரும் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில், அதனை சாத்தியமாக்கியவர் செல்வி.ஜெயலலிதா, எனவே அவருக்கு மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருதும், அமைதிக்கான நோபல் பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சிலையை நிறுவவும், ஜெயலலிதா பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுக -வை வழி நடத்த அவரது தோழி வி.கே.சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்றும் செயற்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.