Home Featured தமிழ் நாடு கண்ணீர் மல்க பதவியை ஏற்றுக் கொண்ட சசிகலா!

கண்ணீர் மல்க பதவியை ஏற்றுக் கொண்ட சசிகலா!

762
0
SHARE
Ad

சென்னை – பொதுச் செயலாளர் பதவியை ஏற்று அதிமுகவை வழிநடத்திச் செல்ல வேண்டுமென அதிமுக பொதுக் குழுவில் இன்று தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவினர் போயஸ் கார்டன் சென்று அந்தத் தீர்மானத்தை சசிகலாவின் ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைத்தனர்.

sasikala-ops-handing-over-resolutionஓ.பன்னீர் செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை ஆகியோர் அளித்த அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து வணங்கும் சசிகலா….

அந்தத் தீர்மானத்தை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்ட சசிகலா அந்தத் தீர்மானத்தை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து வணங்கி, பொதுச் செயலாளராக பதவியேற்க ஒப்புதல் தந்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பச்சை நிறத்திலான அட்டையில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டபோது, சசிகலாவும் பச்சை நிறப் புடவையில் காட்சியளித்தார்.

மொத்தம் 14 தீர்மானங்கள் இன்றைய அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானங்களில் ஒன்று சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

sasikala-accept-nomination-gen-sec

அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கும்  சசிகலா…