Home Featured வணிகம் பிப்ரவரி 10 முதல் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்திற்கு புதிய விமானம்!

பிப்ரவரி 10 முதல் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்திற்கு புதிய விமானம்!

767
0
SHARE
Ad

himalayan_airகோலாலம்பூர் – நேபாள் – சீனாவின் கூட்டுமுயற்சியில் உருவாகியிருக்கும் ஹிமாலயா ஏர்லைன்ஸ் என்ற புதிய விமானம், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு புதிய விமானத்தை இயக்கவுள்ளது.

இவ்விமானச் சேவை வாரத்தில் 5 நாட்கள் இயங்கவுள்ளது. கோலாலம்பூர் – காத்மாண்டு இடையிலான இருவழிப் பயணத்திற்கான அடிப்படை விலை 1,035 ரிங்கிட்டிலிருந்து தொடங்குகிறது.

மலேசிய சுற்றுலாப் பயணிகளோடு, இங்கிருக்கும் 450,000 நேபாளத் தொழிலாளர்களை அடிப்படையாக வைத்து இந்த விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது ஏர்ஆசியா எக்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர் மற்றும் நேபாள் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் காத்மாண்டுவிற்கு நேரடிப் பயண சேவையை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.