Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசர சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு!

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசர சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு!

771
0
SHARE
Ad

ops_modiசென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, புதுடெல்லியில் நேற்று வியாழக்கிழமை தமிழக ஆளுநர் வித்யாசாகருடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அது குறித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் அறிவிக்கவுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.