Home சமயம் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு

சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு

971
0
SHARE
Ad

citra-pournamiகோலாலம்பூர், மார்ச்.21- ஒவ்வொரு ஆண்டும் சித்திர புத்திரன் அவதரித்த சித்திரை முழுநிலவு நாளன்று சித்திரை நோன்பு கொண்டாடப்படுகிறது.

சித்திரை நோன்பு எனும் விரதத்தைப் பெண்கள்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதம் இருக்கின்றனர்.

சித்திர புத்திரன் காமதேனுப் பசுவின் கர்ப்பத்தில் இருந்து பிறந்ததால், பசுவின் பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் எந்தப் பொருள்களையும் இந்த விரத நாளில் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடாக உள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்நாளில் சித்திரை நோன்பு மேற்கொள்பவர்கள் அன்று தங்கள் உணவில் உப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை.

வீடுகளில் மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி, வாசனைப் பொருள் கலந்த பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

இந்தப் பூஜையைச் செய்பவர்கள் சித்திர புத்திரர் கோவிலுக்குச் சென்று ஏழை மாணவர் ஒருவருக்கு ஏடு, எழுதுகோல் போன்ற எழுது பொருட்களைத் தானமாக வழங்கிட வேண்டும்.

அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். சித்திர புத்திரர் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவபெருமான் கோவிலுக்குச் செல்லலாம்.