Home நடந்த நிகழ்ச்சிகள் கலைஞர்கள் அனைத்துலக நிலையில் வெற்றியடைய அடிப்படைப் பயிற்சி முக்கியம்- மெக்லின் டிக்ருஸ்

கலைஞர்கள் அனைத்துலக நிலையில் வெற்றியடைய அடிப்படைப் பயிற்சி முக்கியம்- மெக்லின் டிக்ருஸ்

797
0
SHARE
Ad

maclinகோலாலம்பூர், மார்ச்.21- அண்மையில் தலைநகரில் சிறுவர்களுக்கான பாடும் பயிற்சி பட்டறை சிறப்பாக நடந்தேறியது.

மலேசிய இந்திய கலைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் பாடும் பயிற்சி பட்டறையை பண்பாட்டுத்  துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டிக்ருஸ் (படம்) அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் தலைமையிலான தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மலேசிய இந்திய கலைஞர்களுக்கு பல்வேறு நிலையில் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உதவிகளும் ஆலோசனைகளும் செய்து தரப்பட்டு வருகின்றன” என்று நிகழ்வில் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

#TamilSchoolmychoice

“இசைத்துறையில் ஒவ்வொரு கலைஞர்களும் தங்களிடம் உள்ள தனித் திறமையை பயிற்சியின் வழி மேம்படுத்திக் கொண்டால்தான் அனைத்துலக நிலையில் மலேசிய இந்திய கலைஞர்கள் பெயர் பதிக்க முடியும்.  இவ்வாறாக வளர்ச்சியடையும் பட்சத்தில் எதிர்கால இசைக்கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். ஆகவே, ஒவ்வொரு கலைஞனும் தன்னுள் மறைந்திருக்கும் ஆற்றலை முறையான பயிற்சியின் வழி சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்” என மேலும் கூறினார்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த பட்டறையின் வழி பயன் அடைந்ததாகவும்,சிறுவர்கள் கொண்டு படைக்கப்பட்ட கலை நிகழ்ச்சியைப் பார்த்து வியந்ததாகவும் துணை அமைச்சர் சொன்னார்.

கோலாலம்பூரில் மட்டுமல்லாது, நாடு தழுவிய நிலையில் இந்தப் பட்டறையை நடத்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.  கோலாலம்பூரில் நடந்த இந்த பயிற்சி பட்டறையை மலேசிய இசையமைப்பாளர் ஜெய் வழிநடத்தினார். மலேசியாவில் பல புகழ் பெற்ற பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த இவர், தம்முடைய இசை அனுபவங்களை புதிய கலைஞர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

geethajali-gபயிற்சி பட்டறையின் நிறைவு விழாவில் ஜி குலோபல் மீடிய நிறுவன உரிமையாளரும் ஆஸ்ட்ரோ விழுதுகள் மற்றும் டி.எச்.ஆர்.ராகா  அறிவிப்பாளருமான கீதாஞ்சலி ஜி (படம்)  கலந்து கொண்டு நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இரண்டாவது பயிற்சிப் பட்டறை ஏப்ரல் மாதம் ஜோகூர் பாருவில் நடைபெறுவதாக மலேசிய இந்திய கலைஞர் அமைப்பின் செயலாளர் எஸ்.பி.சரவணன் தெரிவித்தார். ஏப்ரல் 21 ஆம் தேதி , ஸ்கூடாய் தாமான் பிஸ்தாரியில் உள்ள நவீன மியூசிக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. 50 பேர் மட்டுமே பங்கேற்க கூடிய இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள்  07-5116455 மற்றும் 014-6122026 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளலாம் என்றார் அவர்.