Home நாடு “நானே அதிகாரபூர்வ தலைவர்” – கேவியஸ் மீண்டும் அறிவிப்பு

“நானே அதிகாரபூர்வ தலைவர்” – கேவியஸ் மீண்டும் அறிவிப்பு

1146
0
SHARE
Ad
கேவியஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 27) காலையில் தலைநகர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் சிறப்புப் பேராளர் மாநாட்டுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ எம்.கேவியஸ் மைபிபிபி கட்சியின் அதிகாரபூர்வ தேசியத் தலைவர் தான் என்பதை சங்கப் பதிவிலாகா உறுதிப்படுத்தியிருப்பதை மீண்டும் அறிவித்தார்.

அதற்கு ஆதாரமாக மே 18 தேதியிட்ட சங்கப் பதிவிலாகா கடிதத்தையும் சுட்டிக் காட்டினார்.

இன்று நடைபெற்ற மைபிபிபி மாநாட்டில் சுமார் 1,400 பேராளர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் கேவியஸ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நேற்று மெக்லின் டிகுருஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26 மே) நடைபெற்ற பேராளர் மாநாடு சட்டப்படி செல்லாது என்றும் கேவியஸ் அறிவித்தார்.

மெக்லின் டிகுருஸ், சங்கப் பதிவதிகாரியைக் கடந்த வியாழக்கிழமை மே 24 சந்தித்தது குறித்து கருத்துரைத்த கேவியஸ் முடிந்தால் அதுகுறித்த எழுத்துபூர்வமான ஆதாரங்களை மெக்லின் வெளியிட வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

தான் நடத்திய இன்றைய மைபிபிபி மாநாட்டுக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது குறித்தும் கருத்து தெரிவித்த கேவியஸ் “அவர்கள் உண்மையான சட்டபூர்வமான, அணியினராக இருந்தால் நான் நடத்தும் மாநாட்டைப் பற்றி ஏன் பயப்படுகிறார்கள்” என்றும் கேள்வி எழுப்பினார்.