Home நாடு மைபிபிபி கட்சி சங்கப் பதிவகத்தால் இரத்து செய்யப்பட்டது!

மைபிபிபி கட்சி சங்கப் பதிவகத்தால் இரத்து செய்யப்பட்டது!

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவகம், மைபிபிபி கட்சியின் பதிவை இன்று (திங்கட்கிழமை) இரத்து செய்தது.

கடிதம் ஒன்றின் வாயிலாக, இன்று அக்கட்சியின் இரு தரப்பினருக்கும், இந்த இரத்து குறித்து சங்கப் பதிவாளர் மாஸ்யாதி அபாங் இப்ராகிம் மூலம் தெரிவிக்கப்பட்டது.   

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் செய்திருந்த மேல்முறையீட்டுக்கு போதுமான காரணங்கள் பெறப்படாததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ், இம்முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் அவர்கள் முறையிடலாம்.

மைபிபிபி கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்து, இரு தரப்பும் கட்சிக்குத் தலைமைத் தாங்குவதாகக் கூறி வந்தன.

முன்னாள் துணை அமைச்சர் எம். கேவியஸ் ஒரு குழுவாகப் பிரிந்து தற்போது நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளார். 

இதற்கிடையே, முன்னாள் துணை அமைச்சர் மக்லின் டி குருஸ் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியின் தோழமைக் கட்சி என குறிப்பிட்டிருந்தார்.