கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்காத பூர்வக்குடி கிராமத் தலைவர்களின் பதவி மற்றும் வருமானத்தைப் பறிக்கக் கோரி கேமரன் மலையில் பேசிய செனட்டர் போப் மனோலான் முகமட், இன்று (திங்கட்கிழமை), அறிக்கை ஒன்றின் வாயிலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
ஜனவரி 11-ஆம் தேதி தாம் அவ்வாறு பேசியது “மிகவும் மூர்க்கத்தனமானது” என்றும், கிராமத் தலைவர்களுக்கு விடுத்த அச்சுறுத்தலாக சிலர் அதனை அர்த்தம் கொள்ளலாம் என்றும் ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையே, மனோலானின் அக்கூற்றிற்கு பகாங் மாநில அம்னோ இளைஞர் பிரிவு காவல் துறையில் அவர் மீது புகார் ஒன்றைப் பதிவுச் செய்தது. மேலும், பெர்சே இயக்கம் போப் மனோலான் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.
பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இது குறித்து மனோலான் விளக்கம் கூற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.