Home நாடு தேமு தலைவர்களுடன் கீதாஞ்சலி ஜி: புகைப்படங்களை வெளியிட்டார் லிம்!

தேமு தலைவர்களுடன் கீதாஞ்சலி ஜி: புகைப்படங்களை வெளியிட்டார் லிம்!

1257
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் விவகாரத்தில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் விசாரணை செய்யப்பட்ட தொழிலதிபர் ஞானராஜாவின் மனைவியும், தொலைக்காட்சிப் பிரபலமுமான டத்தோ கீதாஞ்சலி ஜியுடன், தேசிய முன்னணித் தலைவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை லிம் குவான் எங் இன்று திங்கட்கிழமை வெளியிட்டார்.

கொம்டாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய லிம், “அந்த இந்திய தொழிலதிபரின் மனைவியுடன் தேசிய முன்னணித் தலைவர்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்களே அதைப் பற்றி தேசிய முன்னணி ஊடகங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்குமா?

“தேசிய முன்னணித் தலைவர்களுடன் அவரது மனைவி நிறைய புகைப்படங்களில் இருக்கிறார். இதிலிருந்து அவர்கள் இருவரும் (ஞானராஜா – கீதாஞ்சலி) தீவிரமான தேசிய முன்னணி ஆதரவாளர்கள் எனத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

“அதனால் தான் சொல்கிறேன் தேசிய முன்னணி ஊடகங்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்” என்று லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

ஞானராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் லிம் குவான் எங், தேமு தலைவர்களுடன் கீதாஞ்சலி இருக்கும் புகைப்படங்களை இன்று வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.