Home இந்தியா நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!

நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!

825
0
SHARE
Ad
ம.நடராஜன் (கோப்புப் படம்)

சென்னை – சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து வருவதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் கிளெனிகல்ஸ் மருத்துவமனை இன்று திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

6 மாதங்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் செயலிழந்து அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நடராஜன், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், கடந்த நவம்பர் மாதம் எழுந்து நடமாடும் நிலைக்கு வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

நெஞ்சு தொற்று காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.