
பெங்களூர் – மறைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூர் சிறையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் வி.கே.சசிகலா.
முன்னதாக, அவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பெங்களூர் சிறை நிர்வாகம் அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை செல்லும் சசிகலா அங்கு நாளை நடைபெறவிருக்கும் நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகின்றது.
முன்னதாக இன்று செவ்வாய்க்கிழமை சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ம.நடராஜனின் உடலுக்கு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.