Home இந்தியா சசிகலாவின் கணவர் ம.நடராஜன் காலமானார்!

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் காலமானார்!

1589
0
SHARE
Ad

சென்னை – உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான நிலையில், கிளெனிகல்ஸ் குளோபஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவசர பரோலில் இன்று வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.