Home இந்தியா 2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு!

2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு!

1175
0
SHARE
Ad

புதுடெல்லி – 2ஜி வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றப்புலனாய்வுத் துறை அறிவித்திருந்த நிலையில், கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் விடுதலைக்கு எதிராக, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருக்கிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமலாக்கத்துறை இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவைச் சமர்ப்பித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மிக விரைவில், குற்றப்புலனாய்வுத்துறையும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.