Home இந்தியா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

667
0
SHARE
Ad

சென்னை : திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இன்று சனிக்கிழமை (மே 29) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்றும் தமிழம ஊடகங்கள் தெரிவித்தன.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆ.ராசாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணியளவில் பரமேஸ்வரி மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.