Home உலகம் ஸ்டீபன் ஹாக்கிங் உடமைகள் இனி இலண்டன் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்

ஸ்டீபன் ஹாக்கிங் உடமைகள் இனி இலண்டன் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்

707
0
SHARE
Ad

இலண்டன் : உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர், ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங். உடல் சதைகளை உருக்கும் அபூர்வமான கொடிய நோய்க்கு ஆளாகி வாழ்க்கையின் பெரும்பகுதியை தள்ளுவண்டியிலேயே கழித்தவர்.

எனினும் இறுதிவரை அவரின் மூளையின் செயலாற்றல் சற்றும் குறையவில்லை. பல ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஆல்பர்ட்ன் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளராகப் போற்றப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

#TamilSchoolmychoice

2018-இல் காலமான இவரின் உடமைகளில் பெரும்பான்மையானவற்றை பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக நூலகமும் இலண்டனிலுள்ள அறிவியல் அருங்காட்சியகமும் இணைந்து கையகப்படுத்தியுள்ளன.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், அவரின் தள்ளுவண்டி, இயற்பியல் குறித்த அவரின் ஆராய்ச்சிக் குறிப்புகள் போன்ற பல பொருட்கள் இனி இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் (London’s Science Museum) பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

2002 முதல் 2018-ஆம் ஆண்டில் அவர் மறையும்வரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதம் மற்றும் இயற்பியல் தத்துவம் பிரிவிலுள்ள அலுவலகத்தை ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்தி வந்தார்.