Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,999 ஆகக் குறைந்தன

கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,999 ஆகக் குறைந்தன

298
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999 ஆகக் குறைந்தன. நேற்று சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில் வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சுமார் 2 ஆயிரம் தொற்றுகள் ஒரே நாளில் குறைந்திருக்கின்றன.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது  565,533- ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பதிவு செய்தது. 2,477 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து இரண்டாவது நிலையில் கோலாலம்பூர் 616 தொற்றுகளைப் பதிவு செய்த்து.

கிளந்தானில் 612 தொற்றுகள் பதிவாயின. நேற்று 898 தொற்றுகளைக் கொண்டிருந்த நெகிரி செம்பிலான் இன்று 468  தொற்றுகளைப் பதிவு செய்தது.

ஜோகூரில் 433 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 513 தொற்றுகள் பதிவாகின.