Home நாடு கொவிட்-19: மரணங்கள் 79 – புதிய தொற்றுகள் 6,999

கொவிட்-19: மரணங்கள் 79 – புதிய தொற்றுகள் 6,999

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பில் மலேசியாவில் பதிவான மொத்த மரணங்கள் 79 ஆகும்.

இதே ஒரு நாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999 ஆகக் குறைந்தன. நேற்று சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில் வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சுமார் 2 ஆயிரம் தொற்றுகள் ஒரே நாளில் குறைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது  565,533- ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி இன்றைய விவரங்களை வெளியிட்டார்.

பதிவான 6,999 புதிய தொற்றுகளில் 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். எஞ்சிய 6,993 தொற்றுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே பெறப்பட்டதாகும்.

தொற்றுகளில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,121 ஆகும். இதைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 484,787 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் 78,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 846 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 419 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரண எண்ணிக்கை 79 ஆக பதிவான நிலையில் இதுவரையிலான மரண எண்ணிக்கை 2,729 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பதிவு செய்தது. 2,477 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து இரண்டாவது நிலையில் கோலாலம்பூர் 616 தொற்றுகளைப் பதிவு செய்த்து.

கிளந்தானில் 612 தொற்றுகள் பதிவாயின. நேற்று 898 தொற்றுகளைக் கொண்டிருந்த நெகிரி செம்பிலான் இன்று 468  தொற்றுகளைப் பதிவு செய்தது.

ஜோகூரில் 433 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 513 தொற்றுகள் பதிவாகின.