Home கலை உலகம் “எனக்குப் பின்னால் கடவுள் தான் இருக்கிறார்; பாஜக இல்லை” – ரஜினி பதில்!

“எனக்குப் பின்னால் கடவுள் தான் இருக்கிறார்; பாஜக இல்லை” – ரஜினி பதில்!

918
0
SHARE
Ad

சென்னை – இமையமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் ராமராஜ்ய இரத யாத்திரை செல்வதற்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

மேலும், ஆன்மீகப் பயணத்தின் போது பாஜக தலைவர்களைச் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தனக்குப் பின்னால் கடவுளும், மக்களும் மட்டுமே இருக்கின்றனர் என்றும், பாஜக இல்லை என்றும் திட்டவட்டமாக ரஜினி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், அரசியல் குளத்தில் தான் இன்னும் முழுமையாக இறங்கவில்லை என்றும், இறங்கிய பின் நிச்சயமாக நீந்தி தான் ஆக வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

இதே கேள்விக்கு இன்னும் எத்தனை முறை தான் பதில் சொல்வதென்று எனக்கே தெரியவில்லை என கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு ரஜினி கூறினார்.