Home One Line P2 கனிமொழிக்கு கொவிட்-19 தொற்று

கனிமொழிக்கு கொவிட்-19 தொற்று

761
0
SHARE
Ad

சென்னை: நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தூத்துகுடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“எனக்கு கொவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.