சென்னை : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய விதிகளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியுடன் தமிழ் நாடு எங்கும் தேர்தல் பரப்புரைகள் நிறைவுக்கு வந்தன.
களத்தில் மோதும் இரண்டு முக்கியக் கட்சிகளின் தலைவர்களான ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தத்தம் தொகுதிகளில் தங்களின் பிரச்சாரங்களை நிறைவு செய்தனர்.
தொகுதிகளோடு சம்பந்தப்படாதவர்கள் இன்றுடன் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் போன்ற மதுபானக் கடைகளும் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன.
முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் களத்தில் நிற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சீமான், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரே அந்த ஐவராவர்.
பல தொகுதிகளில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
அண்டை மாநிலமான கேரளாவிலும் அதே ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது.