கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருப்பினும், அதன் தலைவர் முகமட் ஷாபி அப்துல்லா கூறுகையில், இந்த வழக்கு அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
இன்று இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, நஜிப்பின் வழக்கைக் கையாள போதுமான குற்றவியல் வழக்கு அனுபவம் கொண்ட ஒரு நீதிபதி தேவை என்று ஷாபி வாதிட்டார்.
ஜூலை 2018- இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இந்த வழக்கை நீதிபதி முகமட் சோபியன் அப்துல் ரசாக்கிடமிருந்து எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கிற்கு முன்பு, நஸ்லான் பொது வழக்குகளை கையாண்டார். இந்த ஆண்டு மார்ச் 1 முதல், அவர் மீண்டும் பொது நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
எஸ்.ஆர்.சி குற்றவியல் வழக்கை, இதுபோன்ற விஷயங்களில் அனுபவமுள்ள ஒரு நீதிபதி விசாரித்திருக்க வேண்டும் என்று ஷாபி கூறினார்.