Home One Line P1 எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தமது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விண்ணப்பத்தை தொடர்ந்து விசாரித்தது.

நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் விண்ணப்பத்திற்கு இந்த முடிவை எடுத்தனர்.

#TamilSchoolmychoice

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் நஜிப்பின் விண்ணப்பத்தின் முடிவு நிலுவையில் உள்ளதால், ஒரு மாத ஒத்திவைப்புக்கு ஷாபி விண்ணப்பித்தார்.

அமெரிக்க விண்ணப்பத்தின் முடிவுகள், மலேசியாவில் அவரது தற்காப்புக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

“நாங்கள் (இன்றைய விசாரணை) தொடர முடிவு செய்தோம்,” என்று நீதிபதி அப்துல் கரீம் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை 28- ஆம் தேதி, அதிகார அத்துமீறல், மூன்று நம்பிக்கை மோசடி மற்றும் மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

இருப்பினும், நஜிப்பின் மேல்முறையீட்டு முடிவு நிலுவையில் உள்ளதால், தண்டனையை ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதித்தது.