கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதில், 67 வயதான நஜிப், 7 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டில் குற்றவாளி என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தீர்பளித்தார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமாகும். இது தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
இன்று காலை 6.30 மணி முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நஜிப்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூடி இருந்தனர்.
(மேலும் தகவல்கள் தொடரும்)