Home One Line P1 நீதிமன்ற வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது!

நீதிமன்ற வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது!

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் கடுமையான பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான 7 ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க இருப்பதால், அவரின் ஆதரவளர்கள் அதிகாலை முதல் அங்கு கூடியுள்ளனர்.

அங்கு கூடியிருந்தவர்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் காவல் துறையினர் அவர்களை, அவ்வாறு செய்யுமாறும், முகக்கவசங்களை அணியுமாறும்  ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கிட்டத்தட்ட 1,000 பேர் அங்கு கூடியுள்ளனர். கிட்டத்தட்ட 20 பேருந்துகளில் பெக்கான் நாடாளுமன்றத்திலிருந்து நஜிப்புக்கு ஆதரவு அளிக மக்கள் வந்துள்ளனர்.

காலை 10.30 வரையிலான நிலவரப்படி, நிலைமை கட்டுப்பட்டுக்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.