கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்காப்பு தரப்பு வாதங்களை செவிமெடுத்தப் பின்னர் நீதிபதி தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைத்துள்ளார்.
சிறைத் தண்டனை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகிய இரண்டு அம்சங்களையும் தற்காலிகமாக ஒத்தி வைப்பதற்கான சிறப்பு சூழ்நிலைகளை தற்காப்பு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று நீதிபதி நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார்.
இருப்பினும், பிணைத் தொகையை இரண்டு உத்தரவாதங்களுடன் மேலும் 1 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். நஜிப் ஏற்கனவே 6 மில்லியன் ரிங்கிட்டை பல்வேறு வழக்குகளுக்காக பிணைத் தொகையாக ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.
இந்த எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்புக்கு பிணைத் தொகை 1 மில்லியனாக விதிக்கப்பட்டிருந்தது.
நஜிப் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 தேதிகளில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணத்தைச் செலுத்த அவருக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டது.