Home இந்தியா ம.நடராஜனின் உடல் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நல்லடக்கம்!

ம.நடராஜனின் உடல் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நல்லடக்கம்!

1222
0
SHARE
Ad

சென்னை – புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது உடல் நேற்று பெசண்ட் நகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நடராஜனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை மாலை, முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நடராஜனின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருக்கும் தகவலில், முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நடராஜனுக்குச் சொந்தமான இடத்தில் திராவிட முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.