Home நாடு மூவாரில் மணல் தூர்வாரும் படகு கவிழ்ந்து 12 பேர் மாயம்!

மூவாரில் மணல் தூர்வாரும் படகு கவிழ்ந்து 12 பேர் மாயம்!

947
0
SHARE
Ad

பத்து பகாட் – மூவார், பாரிட் ஜாவா கடற்பகுதியில் இன்று புதன்கிழமை காலை மணல் தூர்வாரும் படகு கவிழ்ந்ததில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் மாயமானதாக பத்துபகாட் பகுதி மலேசியக் கடற்படை தெரிவித்திருக்கின்றது.

இன்று காலை 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியதாகவும், கடலில் மூழ்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 12 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.