Home இந்தியா “மரியாதைக்குக் கூட அதிமுக இரங்கல் தெரிவிக்கவில்லையே” – சீமான் வருத்தம்!

“மரியாதைக்குக் கூட அதிமுக இரங்கல் தெரிவிக்கவில்லையே” – சீமான் வருத்தம்!

1202
0
SHARE
Ad

சென்னை – புதியபார்வை ஆசிரியர் ம.நடராஜன் மறைவுக்கு ஆளுங்கட்சியான அதிமுக, ஒரு மரியாதைக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லையே என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்.

“அரசியலைத் தாண்டி, மறைந்த நடராஜன் அவர்கள், ஒரு தமிழ்ப் பற்றாளர், தமிழை வளர்க்கப் பாடுபட்டவர் என்ற முறையில், ஒரு மரியாதைக்காவது அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கலாம். நடராஜன் மறைந்த வலியை விட இந்த வலி தான் எனக்கு அதிகமாக இருக்கிறது. அறிஞர் அண்ணாவும், காமராஜரும் வாழ்ந்து மறைந்த மண், இன்று இப்படிப்பட்ட பண்பாடற்ற மனிதர்களின் கையில் இருப்பது வேதனை” என்றும் சீமான் கூறியிருக்கிறார்.

மேலும், நடராஜன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவி சசிகலாவை சந்திக்க வைப்பதற்கு ஒரு அதிமுக தலைவர் கூட முயற்சி எடுக்கவில்லையே என்றும் சீமான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice