Home இந்தியா சீமான்-விஜய் மோதல் : விவாதிக்கக் கூடுகிறது தவெக கட்சி!

சீமான்-விஜய் மோதல் : விவாதிக்கக் கூடுகிறது தவெக கட்சி!

217
0
SHARE
Ad

சென்னை : விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியும், (தவெக) சீமானின் நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இணைந்து கூட்டணி அமைப்பார்கள் என சில அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை நவம்பர் 2) நடைபெற்ற கூட்டமொன்றில் விஜய்யின் கொள்கைகளை சீமான் கடுமையாகச் சாடினார்.

திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் ஒன்றாக இணைக்க முடியாது அவை இரண்டும் வெவ்வேறானவை என சீமான் சுட்டிக் காட்டினார். தனது வாக்கு வங்கி விஜய்யால் சிதைந்து விடும் என சீமான் அஞ்சுவதாக காங்கிரஸ் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சீமானின் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதா என்பதை விவாதிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கட்சியினர் விஜய் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய் முன்வைத்த அவரின் கட்சிக் கொள்கைகள் தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் தொடர்ந்து விவாதங்களாக உருமாறியுள்ளன.