Home வணிகம்/தொழில் நுட்பம் பற்று அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கு துணைக் கட்டணங்கள் இல்லை!

பற்று அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கு துணைக் கட்டணங்கள் இல்லை!

954
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வாடிக்கையாளர்கள் பற்று அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் மூலம், வாங்கும் பொருளுக்கு பணம் செலுத்தும் போது, விற்பனையாளர்கள் அதற்கு துணைக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பேங்க் நெகாரா கூறியிருக்கிறது.

அனைத்துலக அட்டைத் திட்டத்தின் விதிகளின் படி, விசா மற்றும் மாஸ்டர் அட்டைகள், கட்டண அட்டை சீர்திருத்த கட்டமைப்பின் கீழ் இருப்பதாகவும் பேங்க் நெகாரா தெரிவித்திருக்கிறது. 

இது குறித்து பேங்க் நெகாரா இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் பற்று அட்டை அல்லது கடன் அட்டையில் பணம் செலுத்தும் போது விற்பனையாளர்கள் துணைக் கட்டணங்கள் விதித்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடமோ அல்லது அட்டை விநியோகஸ்தரிடமோ புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறது.