Home கலை உலகம் விஜய், அஜீத் என் இருகண்கள் மாதிரி- இயக்குனர் எழில்

விஜய், அஜீத் என் இருகண்கள் மாதிரி- இயக்குனர் எழில்

932
0
SHARE
Ad

elilசென்னை, மார்ச்.21- தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.

இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ’மனம் கொத்திப் பறவை’ உள்ளிட்ட ஏராளமான  வெற்றிப்படங்களை கொடுத்த பெருமைக்குரியவர்.

இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற நகைச்சுவை இருக்கும்.

#TamilSchoolmychoice

சூரி, பிந்து மாதவி கதாநாயகிகள்  மற்றும் இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் மிக பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் அவர் கூறுகையில், நல்ல கதைக்காகக்  காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி. அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.