Home Featured நாடு அஸ்ட்ரோவில் தைப்பூசத்தை முன்னிட்டு 48 மணிநேர இணைய நேரலை

அஸ்ட்ரோவில் தைப்பூசத்தை முன்னிட்டு 48 மணிநேர இணைய நேரலை

1055
0
SHARE
Ad

Astroகோலாலம்பூர் – மலேசிய மண்ணில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் தைப்பூசமும் ஒன்று. லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த ஒன்றுக்கூடும் கோலாகல திருவிழா இது. பால்குடம் ஏந்தி, அலகு குத்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்து வீதி எங்கும் பக்தி பரவசம் பொங்க, வண்ண வண்ண காவடிகள் பவனி வரும் அழகைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் திரளாக வருகின்றனர்.

இந்த வருடம், தைப்பூசக் கொண்டாட்டத்தின் 48 மணிநேரம் இணைய நேரலையை உங்களுக்கு கொண்டு வருகிறது www.astroulagam.com.my. பிப்ரவரி 8-ஆம் தேதி, நள்ளிரவு 00:01 மணி முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி, நள்ளிரவு 23.59 மணி வரை இந்த இணைய நேரலை வழங்கப்படும்.

Astro1இந்த அகப்பக்கத்தின் வாயிலாக, ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர் மலை,  மற்றும் தம்போய் ஜொகூர் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயத் திருத்தலங்களின் நடைப்பெறும் தைப்பூசத் திருவிழா நேரடி காட்சிகளை உடனுக்குடன் காணலாம். மலேசிய வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் மக்கள் இச்சேவையின் வழி தைப்பூசக் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் பழனி, இந்தியா, நல்லூர் மற்றும் இணுவில், இலங்கை தைப்பூசத் திருவிழா காட்சிகள், பாம்பன் சுவாமிகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள்,  காவாடிகள் பற்றிய ஆவணப்படங்கள், சிறப்பு விருந்தினர் திருச்சி லோகநாதன் மகாராஜனின் நிகழ்ச்சிகள் மற்றும் மேலும் பல சிறப்பு அம்சங்கள் உங்களுக்கா காத்துக் கொண்டிருக்கிறது.  மேல் விபரங்களுக்கு  http://www.astroulagam.com.my/thaipusam2017 வலம் வரவும்.

தைப்பூசத் திருவிழா நேரடி காட்சிகளின் விவரம் :-

08.02.2017 புதன்க்கிழமை :-

இரவு 7:00 மணி (30 நிமிடம்)
இரவு 8:30 மணி (15 நிமிடம்)
இரவு 09:30 மணி (15 நிமிடம்)
இரவு 10:00 மணி (15 நிமிடம்)
இரவு 11:00 மணி (15 நிமிடம்)

09.02.2017 வியாழக்கிழமை (தைப்பூசத் திருநாள்) :-

நள்ளிரவு 00:00 மணி (30 நிமிடம்)
நள்ளிரவு 00:45 மணி (15 நிமிடம்)
காலை  08:30 மணி (30 நிமிடம்)
காலை  09:15 மணி (15 நிமிடம்)
காலை  11:15 மணி (15 நிமிடம்)
பிற்பகல் 12:30 மணி (15 நிமிடம்)
பிற்பகல் 01:00 மணி (30 நிமிடம்)
மாலை 04:45 மணி (30 நிமிடம்)
மாலை 05:30 மணி (15 நிமிடம்)
மாலை 06:15 மணி (15 நிமிடம்)
மாலை 07:00 மணி (15 நிமிடம்)
இரவு 08:30 மணி (15 நிமிடம்)
இரவு 09:30 மணி (15 நிமிடம்)
இரவு 11:00 மணி (15 நிமிடம்)