Home Featured நாடு பத்துமலை தைப்பூசம்: 3 நாட்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு இரயில் சேவை

பத்துமலை தைப்பூசம்: 3 நாட்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு இரயில் சேவை

844
0
SHARE
Ad

Thaipusamபத்துமலை – இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, 24 மணி நேர சிறப்பு இரயில் சேவை வழங்குவதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்தது.

இது குறித்து கேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி, நடைபெறவுள்ள பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு 24 மணி நேர சிறப்பு இரயில் சேவை வழங்குகிறோம்.”

“இந்த சிறப்பு இரயில் சேவை 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கும். இதனைப் பயன்படுத்தி பக்தர்கள் பத்துமலைக்குச் சென்று தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். கிள்ளான் துறைமுகத்திலிருந்து பத்துமலை, சுங்கை காடூட்டிலிருந்து ரவாங், இதற்கு இடையிலான இரயில் சேவைகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். கிள்ளான் துறைமுகம், கிள்ளான், ரவாங், சிரம்பான் ஆகிய இடங்களில் இருந்து இரவு 10.30 மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை பத்துமலைக்கு நேரடி சிறப்பு இரயில் சேவைகள் இருக்கும். இந்த மூன்று நாட்களில் மொத்தம் 623 முறை சிறப்பு இரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன”

#TamilSchoolmychoice

“தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கான இரயில் டிக்கெட் விலையில் 20 விழுக்காடு கழிவு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள், வயதானோர், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்” என்று எஸ்.மகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், நாளை புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, கேடிஎம் நிலையங்களை அடைய கிராப் (Grab) வாடகைக் கார்களைப் பயன்படுத்தும் 1000 பேருக்கு, 8 ரிங்கிட் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார்.