Home Featured நாடு ‘பாலியல் குற்றவாளி’ செல்வ குமார் மலேசியா வந்தடைந்தார்!

‘பாலியல் குற்றவாளி’ செல்வ குமார் மலேசியா வந்தடைந்தார்!

1106
0
SHARE
Ad

selvakumarகோலாலம்பூர் – கனடாவில் தொடர் பாலியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையான மலேசியரான செல்வ குமார் சுப்பையா, இன்று செவ்வாய்க்கிழமை மலேசியா வந்தடைந்தார்.

57 வயதான செல்வ குமார், இன்று காலை 7 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வு தலைமை மூத்த துணை ஆணையர் ஃபாட்சில் அகமட் தெரிவித்தார்.

“அவர் கேஎல்ஐஏ வந்துவிட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனினும், அதற்கு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க இயலாது” என்று ஃபாட்சில் கூறினார்.

#TamilSchoolmychoice