Home Featured தமிழ் நாடு “போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?” – பி.எச்.பாண்டியன் சந்தேகம்!

“போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?” – பி.எச்.பாண்டியன் சந்தேகம்!

760
0
SHARE
Ad

P.H.Pandianசென்னை – ஜெயலலிதாவிற்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, போயஸ் கார்டனில் என்ன நடந்தது? என்பதில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் சபாநாயகரும், அதிமுக தலைவருமான பி.எச்.பாண்டியன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பி.எச்.பாண்டியன் கூறியதாவது:-

“ஜெயலலிதா சுயநினைவில்லாத நிலையில் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா குடும்பத்தினரின் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை”

#TamilSchoolmychoice

“போயஸ் கார்டனில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவரைத் தூக்கி விடக் கூட யாரும் முன்வரவில்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதனை விசாரணை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.