Home Featured உலகம் சீனா ராட்டின விபத்து: பலியான சிறுமியின் குடும்பத்திற்கு 870,000 யுவான் இழப்பீடு!

சீனா ராட்டின விபத்து: பலியான சிறுமியின் குடும்பத்திற்கு 870,000 யுவான் இழப்பீடு!

835
0
SHARE
Ad

Chinaபெய்ஜிங் – சீனாவில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றில், ‘ஸ்பேஸ் ரைடர்’ எனப்படும் ராட்சத ராட்டினத்தில், இருந்து விழுந்து இறந்த 14 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 870,000 யுவான் (561,558 ரிங்கிட்) வழங்குவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கான் டியான் என்ற சிறுமியும், அவரது 9 வயது சகோதரியும் ராட்சத ராட்டினத்தில் ஏறிப் பயணம் செய்த போது, கான் டியானின் இருக்கை வார் பட்டை அறுந்ததில் அவர் அவ்வளவு உயரத்தில் இருந்து வீசி எறியப்பட்டார். இதில் ராட்டினத்தின் சுழலும் பாகங்களில் சிக்கி உடல் நசுங்கி கான் டியான் மரணமடைந்தார்.

இந்நிலையில், அந்த ராட்டினம் முறையின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சம்பவத்தை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice