Home இந்தியா பழிவாங்கும் நடவடிக்கையா? -கருணாநிதி பதில்

பழிவாங்கும் நடவடிக்கையா? -கருணாநிதி பதில்

619
0
SHARE
Ad

karunanithiசென்னை, மார்ச்.22-மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

அதே சமயம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டு கார் வாங்கியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:-

#TamilSchoolmychoice

மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது தவறு என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சோதனை தனக்குத் தெரியாமல் நடந்துள்ளது என்று மத்திய அமைச்சரே கூறியுள்ள நிலையில் அதை நம்ப முடியாது என்று என்னால் சொல்ல முடியாது.

பொதுவாக திமுகவைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடவடிக்கைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பழி வாங்கும் அரசியல் டில்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் இருக்கிறது என்றார் கருணாநிதி.

கூட்டணியிலிருந்து விலகிய காரணத்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை இது என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு, உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் கருணாநிதி.

தனது வீட்டில் சோதனை நடைபெற்றது தொடர்பாக செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:-

பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.