அவருக்கு வயது 42.
முந்தானை முடிச்சு படத்தின் ஆரம்பக் காட்சிகளில், ஊருக்குள் முதன் முதலாக வரும் பாக்கியராஜின் பெட்டியிலிருந்து அவரது கைக்குழந்தையின் பால்போத்தலைத் திருடிக் குடிக்கும் காட்சியிலிருந்து, படம் முழுக்க தனது வித்தியாசமான தோற்றத்தாலும், நகைச்சுவை நடிப்பாலும் அசத்தியிருந்தார் தவக்களை.
அந்தப் படத்தில் அடிக்கடி ‘பரிமளம்…பரிமளம்…’ என கதாநாயகி ஊர்வசியை அழைத்து இரசிகர்களைச் சிரிக்க வைத்த தவக்களை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களிலும், தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார்.